தீபாவளி முடிஞ்சுருச்சு.. அப்படி இருந்த தங்கம் விலை இப்படி ஆயிருச்சே!
சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்துள்ளது. தீபாவளியையொட்டி தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து இருந்தது. நாள் நெருங்க நெருங்க விலையும் வேகமாக குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. இந்த விலை குறைவிற்கு நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5590 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 9 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44720 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6098 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.48784 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.60 காசுகள் குறைந்து ரூபாய் 72.40 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 579.20 காசாக உள்ளது.