என்ன கடைக்குக் கிளம்பலாமா.. தங்கம் விலை தொடர்ந்து சரிவு!

Meenakshi
Oct 09, 2023,11:47 AM IST


சென்னை: தங்கம் வெள்ளி விலை சந்தையில் நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இன்றும் தங்கம் இறங்குமுகமாகவே இருக்கிறது.


ஒரு நாள் ஏற்றமான நிலையிலும் மற்றொரு நாள் இறக்கமான நிலையிலும் இருக்கிறது தங்கத்தின் விலை. தங்கம் வாங்க கடைக்கு செல்லவிருக்கும் மக்கள், தங்கத்தின் நிலையற்ற நிலையை பார்த்து வாங்குவோமா ? வேண்டாமா? என்று சற்று யோசிக்கவே செய்கிறார்கள். 


இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தே உள்ளது. வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. 




தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காண்போம். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5365 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42920 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5853 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் மட்டுமே குறைவாகும். 


தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூபாய் 5 உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.