கலக்கத்தில் மக்கள்.. ஏறுமுகத்திற்கு திரும்பும் தங்கம் விலை..  சவரனுக்கு "ஆத்தாடி" உயர்வு!

Meenakshi
Oct 20, 2023,01:55 PM IST

சென்னை: கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. 


தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது தங்கம் வாங்கும் வடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.




தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்றால், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5660 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 75 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45280 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6175 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 82 ரூபாய் அதிகமாகும். 


தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை நேற்றைய விலையிலேயே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது. 


நாட்டில் பணவீக்கம் அதிகரித்தல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளவில் உள்ள பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்தே  இருக்கும் என்று  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த விலை ஏற்றம் நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணம், தீபாவளி போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது தங்கத்தின் தேவை அதிகம் இருக்கும். சில தவிர்க்க முடியாத சூழலால் கட்டாயமாக தங்கம் வாங்கும் நிலை உருவாகி வருவதால் கலக்கம் ஏற்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.