ஆ...! என்னே ஒரு அதிசயம்... தங்கம் விலை இன்று குறைவு!
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 288 இன்று குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் தற்பொழுது குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், தீபாவளி, முகூர்த்த நாட்கள் என வருவதால் நகை விலை உயரும் என்று எண்ணி இருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைவு மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்பாடா இன்று குறைந்துள்ளது என்று பெருமூச்சு விடலாம். அதுவும் சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது.
புலம்பிக் கொண்டே நகை வாங்கிய நடுத்தர விஷேசம் வைத்துள்ள மக்கள் இன்று புலம்பாமல் நகை வாங்கலாம். ஒகே இன்றைய விலை நிலவரத்தை பார்த்துட்டு கிளம்பலாமா.... இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5735 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 36 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45880 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6256 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50048 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் அதிகரித்து ரூபாய் 75.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 604.80 காசாக உள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் மந்தமான போக்கு நிலவி வருவதால் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.