சரசரவென இறங்கிய தங்கம் விலை.. இன்று விறுவிறுவன உயர்ந்தது.. சவரனுக்கு ரூ.280!

Meenakshi
May 15, 2024,06:38 PM IST

சென்னை:  தங்கம் விலை  இன்று மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.35 அதிகரித்து சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நிலையற்ற தன்மையில் காணப்படுகிறது. ஒரு நாள் ஏற்றத்திலும், மற்றொரு நாள் இறக்கத்திலும் இருந்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய உச்சம் பெற்று வாடிக்கையாளர்களை கலக்கம் அடைய செய்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இறக்கத்தில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.


இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்றம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 




இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 ஆக உள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 0.30 காசுகள் உயர்ந்து ரூ.91 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.91,000 க்கு விற்கப்படுகிறது.