ஹலோ.. நகை வாங்க பிளான் பண்றீங்களா.. இன்னிக்கு ரேட் என்ன தெரியுமா?
சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. இந்த விலை குறைவு நகை பிரியர்களுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசியில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்திருந்த தங்கத்தின் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று சவரனுக்கு ரூ.392 ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இந்த ஏற்ற இறக்க நிலை இந்த மாதம் முழுவதுமே நீடிக்கும் என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்க சூழல் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை குறைவு பாண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5635 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45080 ரூபாயக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6147 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49176 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய் 75 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 600 உள்ளது.