உடனே கடைக்குப் போங்க.. தங்கம் விலை வீழ்ச்சி.. சவரனுக்கு ரூபாய் 600 சரிவு!
சென்னை: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது கல்யாணம் போன்ற விசேஷ சீசன் கிடையாது.
தங்கத்தின் தேவை புரட்டாசியில் குறைவு என்பதனால் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் சரிந்து வருகிறது.
இந்த விலை குறைவு பொது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறன. இதனால் பொதுமக்கள், இன்னும் நன்றாக விலை குறைந்தால் கடைக்கு ஓடிர வேண்டியதுதான் என்று வெயிட்டிங்கில் உள்ளனர்.
இன்றைய (28-9-23) தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5410 ரூபாயாகும். இது நேற்றைய 1 கிராம் விலையில் இருந்து 70 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43280 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5902 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 76 ரூபாய் குறைவாகும். 1 கிராம் வெள்ளியின் விலை 76.50 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 0.50 காசுகள் குறைந்துள்ளது.