தொடர் சரிவில் தங்கம் வெள்ளி விலை.. ஜாலி மோடில் வாடிக்கையாளர்கள்.. கடைக்காரர்களும் ஹேப்பி!
சென்னை: நேற்று குறைந்திருந்த தங்கம் வெள்ளி விலை இன்று மேலும் குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு இன்று ரூ.40 குறைந்து, ரூ.53.520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி சந்தையில் நேற்றைய விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தை தொடர்ந்து இன்றும் விலை குறைந்துள்ளது. இந்த தொடர் விலைக் குறைவு நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை, அதன் பின்னர், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரை தங்கம் விலை இதே விலையில் தான் நீடிக்கும். குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,690 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.40 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,160 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,280 ஆக உள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
நேற்று குறைந்திருந்த வெள்ளி இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.40 காசுகள் குறைந்து ரூ.95.60க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764.80 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.96,000 இருந்த விலை இன்று ரூ.95.600க்கு விற்கப்படுகிறது.