அப்பாடா.. குறைச்சுருச்சு தங்கம் விலை.. கடைக்கு கிளம்புங்க.. கிளம்புங்க..!
சென்னை: தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் மிகுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.
தீபாவளி, முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நகை விலை அதிகரித்து வந்ததால் வாடிக்கையாளர் மிகுந்த கவலையில் இருந்தனர். இன்று நகை விலை குறைந்துள்ளதால் குதூகலாமாகி விட்டனர்.
நகை மட்டுமா? நகை வாங்குபவர்களுக்கு பரிசு பொருட்களும் கிடைக்கும் அல்லவா. எப்படா.... குறையும் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது தான் நல்ல சமயம். இதை தவறவிடாதீர்கள்.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6218 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49744 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.20 காசுகள் அதிகரித்து ரூபாய் 75.20 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 601.60 காசாக உள்ளது.