தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. புதிய உச்சத்தைத் தொட்டது.. ஒரு பவுன் ரூ. 53,000ஐ தாண்டியது!

Meenakshi
Apr 08, 2024,05:36 PM IST

சென்னை: தாறுமாறக உயர்ந்து வரும் தங்கம் விலை, சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 53,280 க்கு விற்கப்படுகிறது. முதல் முறையாக தங்கம் விலை ரூ. 53,000 ஐ தாண்டியுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.  தற்போது மேலும் மேலும் அதிகரித்து மக்களிடம் இருந்து வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது தங்கம். வருங்காலத்தில் தங்கம் சமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நிலை உருவாகும் என்று பொது மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியே விலை உயர்ந்து வந்தால் பயன்பாடு குறையும் என்று மக்களும், நகைக் கடை உரிமையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.


தங்கம் விலை உயர பல காரணங்கள் இருந்தாலும், தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகபடியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.


இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6660 ரூபாயாக உள்ளது. இது கடந்த சனிக்கிழமை விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53280 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7265 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58120 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது. 


வெள்ளி விலை...


தங்கம் மட்டும் உயரவில்லை வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த சனிக்கிழமை இருந்த  விலையை விட இன்று  ரூ.1 உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 88 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது.