மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

Meenakshi
Sep 20, 2024,11:57 AM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து  ரூ.55,080க்கும், ஒரு கிராமிற்கு ரூ.60 உயர்ந்து  ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.1.50 காசுகள் உயர்ந்துள்ளன.


புரட்டாசி மாதம் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை நகை விலை குறைந்தே இருந்தது.இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் இந்த மாதம் நகை விலை பெரிய அளவில் எந்த ஏற்றமும் இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எண்ணி இருந்தனர்.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்து இருந்த தங்கம் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நாட்டில் நிலவும் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் உள்ளிட்ட  காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்றம்  காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.60 அதிகரித்து ரூ.6,885 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,850 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,88,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,511 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,088 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.75,110 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,51,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,900க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,526க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,516க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இருந்த வெள்ளி இன்று கிராமிற்கு ரூ.1.50 காசுகள் அதிகரித்து ரூ.97.50க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 780 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.975 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,750 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.97,500 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்