தங்கம் விலை எப்படி?... இன்னிக்கும் சரிவுதான்.. அப்பச் சரி அப்பச் சரி.. மக்கள் மகிழ்ச்சி!

Meenakshi
May 04, 2024,05:14 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக புதிய வரலாற்று சாதனை படைத்து  தங்கம் விலை நேற்றும் இன்றும்  குறைந்துள்ளது. அட்சய திருதி வருவதை முன்னிட்டு இந்த விலை குறைவு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தங்கம் விலை குறையுமா? குறையாதா என்று பட்டி மன்றம் வைக்காத குறையாக, புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இன்றைய தங்கம் விலை. கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், நேற்றும் இன்றும் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதுவும் அட்சய திருதிக்கு இன்னும் ஆறு நாட்கள் தான் உள்ளன. இந்த நிலை தொடர் விலை குறைவு, நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.800ம் இன்று சவரனுக்கு ரூ.12ம் குறைந்துள்ளது.


இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் விலை குறைவு என்பது சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,614 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 1 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.12 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52,912 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,215 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,720 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.12 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. நேற்று  மட்டும் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்தது.


சென்னையில் வெள்ளி விலை...


இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை  0.50 காசுகள் குறைந்து ரூ.86.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 692 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.86,500 க்கு விற்கப்படுகிறது.