Gold Rate: தொடர் சரிவில் தங்கம் விலை..  மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Meenakshi
Oct 31, 2023,02:13 PM IST
சென்னை: தங்கம் விலை நேற்று போலவே இன்றும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் மிகுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. 

தீபாவளி, முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவை பொருத்தவரை நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றவைகளில் முதலீடு செய்வதை விட நகையில் முதலீடு செய்தால், அவசர தேவைக்கு உடனே அதனை பயன்படுத்த முடியும். 

மேலும் நகை விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தான் செய்யும் என்ற காரணத்தினால் நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட நகையை வாங்க இது சரியான நேரமாக நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். ஏனெனில் நகை விலை தற்பொழுது குறைந்து உள்ளது. அடுத்தவர்களுக்கு 
இந்த விலை குறைவு தெரிவதற்கு முன்னர் சிக்கரமாக கிளம்புங்கள் நகை பிரியர்களே.....! 



இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5715 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45720 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6235 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 21 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49880 ஆக உள்ளது.

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் குறைந்து ரூபாய்  75.30 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 602.40 காசாக உள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் மந்தமான போக்கு நிலவி வருவதால் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர். பங்கு சந்தை ஏற்றம் காணப்பட்டால் நகை விலையில் ஏற்றம் வந்துவிடுமாம்.