Thiruvannamalai: கிரிவலம் ஏன் செல்கிறோம்.. எப்போது செல்ல வேண்டும்.. என்ன பலன் கிடைக்கும்?
சென்னை: அக்னி தலமான திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் கிரிவலம் செல்வதை ஆயிரக்கணக்கானோர் வழக்கமாக வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு எளிய கைடு இது.
கிரிவலம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான். அக்னி தலம் என்று போற்றப்படும், திருவண்ணாமலையில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர். அதனால் அங்கு சென்றால் சித்தர்களின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
இப்போது திருவண்ணாமலை மட்டுமல்லாமல், திருப்பரங்குன்றம், சென்னிமலை, மருதமலை, ரத்னகிரி, பருவதமலை, திருமயம் உள்ளிட்ட மலைக் கோவில்கள் உள்ள இடங்களிலும் மக்கள் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம்.
எப்போது.. ஏன்.. கிரிவலம் செல்ல வேண்டும் என்று தெரியுமா.. முழு பௌர்ணமியின் போது கிரிவலம் செல்ல வேண்டும். முழு நிலவின் கதிர்கள் நம் மீது படும்போது நம் உடல் குளிர்ச்சி பெற்று மனம் அமைதி பெறும். அப்போது நம் சிந்தனைகள் நல்லதாகவே வெளிப்படும். அப்போது அந்த நாளில் கடவுள் ஒருவரை நம் மனதில் நிறுத்திக் கொண்டு நாம் கிரிவலம் செல்வதால், நம் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் நடந்து செல்லும் போது நம் நுரையீரலின் சுவாசம் சீராக இருக்கும். இந்த காரணங்களால் சித்தர்கள் பல கிரிவலம் செல்வது நல்லது என்று கூறி வந்தனர். இதனால் நம் முன்னோர்கள் இதனை கடைபிடித்து வந்தனர்.
எந்த கிழமைகளில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் ?
திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்குமாம். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்குமாம். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்குமாம். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்குமாம்.
வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்ட பதவி கிடைக்குமாம். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவி பிணி அகலுமாம். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்குமாம்.
திருவண்ணாமலையில் எப்போது கிரிவலம் செல்லலாம்?.. Full list
திருவண்ணாமலையில் இந்த வருடம் எந்த நாளில்.. எந்த கிழமைகளில்.. இந்த நேரத்தில்.. கிரிவலம் செல்ல வேண்டும் என்ற லிஸ்ட்டை உங்களுக்குச் சொல்கிறோம்.. கேட்டுக்கங்க.
பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று, மதியம் 3.33 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.59 வரை கிரிவலம் செல்லலாம்.
மார்ச் மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:54 மணிக்கு தொடங்கி, மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12:29 வரை கிரிவலம் செல்லலாம்.
ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:25 மணிக்கு தொடங்கி, மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5:18 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
மே மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறு 47 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7:22 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
ஜூன் மாதம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:31 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை காலை 6:37 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
ஜூலை 21ஆம் தேதி சனிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5:59 மணிக்கு தொடங்கி திங்கள் கிழமை மதியம் 3:46 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை 3:04 மணிக்கு தொடங்கி அதே நாளில் இரவு 11:55 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11:44 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை அதிகாலை 8.04 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8:40 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4:55 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 19 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை மதியம் இரண்டு 58 மணி வரை கிரிவலம் செல்லலாம்.
டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை மதியம்2 :31 மணி வரை கிரிவலம் செல்லலாம்.