சந்திரயான் 3 வெற்றி.. மஸ்க் முதல் பிரகாஷ் ராஜ் வரை.. Everybody ஹேப்பி அண்ணாச்சி!

Aadmika
Aug 23, 2023,11:17 PM IST
டெல்லி : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்தியான் 3 விண்கலத்தை நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வெற்றி கண்டுள்ளது. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கி உள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. 

விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் படங்களும் வெளியாகி உலகையே பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவிற்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து குவிந்து வருகிறது. உலக பணக்காரர்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை சந்திரயான் 3 வெற்றி பற்றி என்ன செல்லி இருக்கிறார்கள் தெரியுமா?

எலன் மஸ்க் - இந்தியாவிற்கு நல்லது. 

கெளதம் அதானி - வாழ்த்துக்கள் இஸ்ரோ. உங்களால் நாடு பெருமை அடைந்துள்ளது. இது இந்தியாவின் நேரம். 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.



இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் - இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள். சந்திரயான் 3 வெற்றியால் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நிலவின் தென் பகுதியில் முதல் முறையாக சந்திராயன் 3 ஐ தரையிறக்கிற முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு பெற்றுள்ளது. இஸ்ரோ டீமுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை பெருமைப்பட வைத்து விட்டீர்கள். 

கமல்ஹாசன் - நிலவுக்கு அனுப்பும் செற்கைகோள் பாகங்களை சைக்கிளில் எடுத்துச் சென்று காலத்தில் துவங்கி நிலவு வரை...என்ன ஒரு பயணம். இஸ்ரோ டீம் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டது. இந்த வரலாற்று சாதனை நாளை என்றும் மறக்க முடியாது. இந்தியர்கள் நிலவில் உலாவும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நடிகர் மாதவன் - இந்த சாதனையை சொல்ல வார்த்தைகளே இல்லை. பெருமையில் மனம் பூரிக்கிறது. ஜெய் ஹிந்த்.

நடிகர் பிரகாஷ் ராஜ் - இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் பெருமையான தருணம். இஸ்ரோ, சந்திரயான் 3, விக்ரம் லேண்டர், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இந்த அற்புதத்தை உலகமே கொண்டாடுகிறது.