கர்நாடக காங். அரசின் அடுத்த அதிரடி.. ஆக. 5 முதல் 200 யூனிட் மின்சாரம் Free!

Aadmika
Aug 02, 2023,05:00 PM IST
பெங்களூரு : கர்நாடகாவில் 200 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம் என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கிரக ஜோதி திட்டம் என்ற பெயரில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம், 200 யூனிட் வரை இலவச என்ற திட்டம் ஆகஸ்ட் 5 ல் துவங்கப்பட உள்ளது. முதல்வர் சித்தராமைய்யா இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இலவச மின்சார பெற தகுதியான வாவிக்கையாளர்கள் சேவா சிந்து போர்டல் என்ற கர்நாடக அரசின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.



இது தவிர அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சார சேவை வழங்கப்பட உள்ளதாக கர்நாடக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் விரைவில் துவங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இலவச மின்சார திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள் ஜூலை மாதத்திற்கான மின்கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் செலுத்த வேண்டியது கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்தினி பால் ஆகஸ்ட் 01 ம் தேதி முதல் விலை உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் தற்போது இலவச மின்சார திட்டம் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களை அப்படியே கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக மொழியாக அறிவித்து தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பஸ்  பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது போல கர்நாடகாவிலும் வழங்கியுள்ளனர். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். தமிழ்நாட்டிலோ, எந்த மாநிலப் பெண்களாக, திருநங்கையராக இருந்தாலும் கூட இந்த சலுகையை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.