புற்றுநோய்.. உருகுவேயைச் சேர்ந்த முன்னாள் மிஸ் வேர்ல்ட் மரணம்!
Oct 16, 2023,01:09 PM IST
மான்டிவீடியோ: முன்னாள் உலக அழகி ஷெரிகா டி அர்மாஸ் தனது 26 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
உருகுவே நாட்டை சேர்ந்த இவர் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதில் புற்றுநோய்க்கு அர்மாஸ் பலியாகியிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.
ஷெரிகா டி அர்மாஸ்சுக்கு புற்று நோய் கண்டறியப்பட்டதில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தார். சிகிச்சை எதுவும் பலன் அளிக்காத நிலையில் அவர் மரணித்துள்ளார்.
இதுபற்றி அவருடைய சகோதரி மெய்க் டி அர்மாஸ் கூறுகையில், "சிறிய சகோதரி, உயரமாக பறக்கவும்" என இரங்கல் தெரிவித்துள்ளார். ஷெரிகா டி அர்மாஸின் இறப்பிற்கு உருகுவே நாட்டு மக்கள் மற்றும் உருகுவே நாட்டு அழகிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.