Flashback 2023: சொமெட்டோவில் அதிகம் ஆர்டர்  செய்யப்பட்ட உணவு .. என்னான்னு சொல்லுங்க!

Meenakshi
Dec 26, 2023,06:31 PM IST

சென்னை: 2023ம் ஆண்டு சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் வழக்கம் போல பிரியாணிதான் முதலிம் பிடித்துள்ளது. சொமேட்டோ ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அதிகளவில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது தனி வரலாறு. 


2023ம் ஆண்டு தங்களது ஆப் மூலமாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது சொமேட்டோ. அதில், அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி முதலிடத்தில் உள்ளது.


2023ம் ஆண்டு சொமேட்டோ ஆப் மூலமாக கிட்டத்தட்ட 10.09 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம். இந்த பிரியாணி பொட்டலங்களை அடுக்கி வைத்தால் அது டெல்லி குதுப்மினாரைப் போல எட்டு குதுப்மினாருக்குச் சமமானது என்பது சுவாரஸ்யமான ஒரு தகவல்!  ஸ்விக்கியிலும் கூட இதேபோல பிரியாணிதான் இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு உணவு என்பது குறிப்பிடத்தக்கது.




பிரியாணிக்கு அடுத்து பீட்ஸாதான் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு  7.45 கோடி பீட்ஸா ஆர்டர் செய்துள்ளனர். இதை எல்லாம் அடுக்கி வைத்தால் 5 ஈடன் கார்டன் மைதானங்களை நிரப்பலாம்.


4.55 கோடி ஆர்டர்களுடன் நூடுல் பவுல்ஸ் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.  2023ம் ஆண்டு அதிக அளவிலான பிரேக்பாஸ்ட் ஆர்டர் செய்யப்பட்டது பெங்களூரில்தான். நைட் ஆர்டர் அதிகம் வந்தது டெல்லியில். 


மிகப் பெரிய ஆர்டரை செய்த தனி நபர் என்ற பெருமை பெங்களூரைச் சேர்ந்தவருக்குப் போயுள்ளது. அவர்   ஒரே ஆர்டரில் ரூ. 46,273 ரூபாய்க்கு உணவுகளை வாங்கியுள்ளார்.




பிரியாணின்னாலே சொர்க்கம்தான்


பிரியாணி என்ற சொல்லை கேட்டவுடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். முன்பெல்லாம் எப்போதாவதுதான் பிரியாணி சாப்பிட்டோம். இப்போது எல்லாம் பெரும்பாலும் விசேஷங்கள் மற்றும் பண்டிகை என்றாலே பிரியாணி தான் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது. 


பிரியாணியை சாப்பிடுவதே ஒரு ஸ்டைல்தான் பாஸ்.. நல்லா பெரிய தலைவாழை இழை போட்டு, பிரியாணியை அப்படியே பரப்பி.. ரைட் சைடில் கொஞ்சம் தக்காளி தொக்கையும், லெப்ட் சைடில் ரெய்த்தாவையும் வச்சுட்டு.. ஆவி பறக்கும் அந்த பிரியாணியை ஒரு கை எடுத்து அப்படியே கறி கொஞ்சம், ரெய்த்தா கொஞ்சம், தக்காளி தொக்கு கொஞ்சம்.. எடுத்து.. அப்படியே வாயில் வைத்து சாப்பிட்டால்.. ஆஹாஹ்ஹாஹா.. அதாம்லே வர்கீசு.. அதாவது.. அதாம்லே சொகம்!


அப்படியே அடுத்த வாய்க்கு பிரியாணி கொஞ்சம், முட்டை கொஞ்சம்..  அதற்கடுத்து பிரியாணி கொஞ்சம் சிக்கன் கொஞ்சம்.. என்று மாறி மாறி வைத்து சாப்பிட்டால்.. இதை விட வேற சொர்க்கம் ஏது பாஸு.. மனுஷன் பொறந்ததே.. சாப்பிட தான் .. அதுவும் பிரியாணி சாப்பிடத்தான் என்று நினைக்க தோன்றும்.




அப்படிப்பட்ட ஸ்பெஷல் புட்தான் பிரியாணி.  எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பே வராத உணவு பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் விரும்பி உண்ணும் உணவு ஏன்றால், அது பிரியாணி தான். அந்த அளவிற்கு பிரயாணி பிரசித்தம். பிரியாணி செய்வதும் கலை தான். பெரும்பாலனவர்கள் பிரியாணி செய்கிறேன் என்று கூறி சொதப்பி விடுவார்கள். அதனால் ஆர்டர் செய்தால் சேஃப் என்று கருதி பெரும்பாலானர்கள் டக்கென ஆர்டர் செய்து கபகபவென சாப்பிட்டு விடுகிறார்கள்.


என்னங்க நியூஸ் படிச்சு முடிச்சாச்சா.. ஒரு பார்சல் ஆர்டர் போட்ரலாமா..!