இன்னிக்கு என்ன நாள்!.. Fish வாங்க குவிந்த கூட்டம்.. விலையெல்லாம் சீப்தான்!

Su.tha Arivalagan
Aug 27, 2023,11:19 AM IST
சென்னை: சென்னையிலும் இதர நகரங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசவை உணவுப் பிரியர்கள், மீன் வாங்க மார்க்கெட்டுகளில் குவிந்ததால் மீன் கடைகளில் கூட்டம் அலை மோதியது.

குறிப்பாக சென்ன காசிமேடு மீன்பிடி மார்க்கெட்டில் மிகப் பெரியஅளவில் கூட்டம் அலை மோதியது. வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் கறி, மீன் வாங்க மக்கள் அதிக அளவில் அலை மோதுவார்கள். சமீப காலமாக மீன் வாங்க மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.



காரணம், கோழி விலை உயர்ந்து காணப்படுகிறது. கறி விலையும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் குறைந்த விலையில் அதிக அளவில் மீன் வாங்கும் சூழல் உள்ளதால் மீன்களின் பக்கம் மக்களின் கண்கள் பாய்ந்து கொண்டிருக்கிறது.

இன்றும் காலையிலேயே காசிமேடு மீன்பிடி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மொத்த வியாபாரிகள் போலவே சில்லறை விலையில் மீன் வாங்க வந்தோரும் அதிக அளவில் குவிந்து விட்டனர். மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்ததால் விலையும் குறைந்தே காணப்பட்டது. 

வஞ்சிரம் போன்ற மீன் வகைகள் எப்போதும் ரூ. 1000க்கும் மேல்தான் இருக்கும். ஆனால் இன்று சாதா வஞ்சிரம் ரூ. 400க்கே கிடைத்தது. அதேபோல நைஸ் வஞ்சிரம் மட்டும் வழக்கமான விலையில் அதாவது கிலோ ரூ. 1200க்கு கிடைத்தது. இருப்பினும் கடந்த வாரங்களை ஒப்பிடும்போது இது விலை குறைவுதானாம்.

இறால் மீனும் கிலோ ரூ. 350க்கு கிடைக்கிறது. பாறை மீன் கிலோ ரூ. 400, நண்டு ரூ. 400 என விலை குறைந்து காணப்பட்டதால் மக்களும் நிறைய மீன்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.