வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று.. தங்கம் விலை குறைவு... எவ்வளவு தெரியுமா?
சென்னை: கடந்த சனியன்று உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி உள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் இந்த விலை குறைவு முஸ்லீம்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகிறது. இந்த விலை மாற்றம் பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி வந்தது.
இதனால், நகை வாங்குவதா வேண்டாமா? என்று பொதுமக்கள் புலம்பி வந்தனர். அதனால், நகை விலை என்று குறையும் என்று எதிர் பார்த்து காத்திருந்து, நகைகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று நகை விலை குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிகளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இன்றி வெள்ளி விலையும் கடந்த சனியன்று இருந்த விலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,690 ரூபாயாக உள்ளது. இது கடந்த சனிக்கிழமையன்று இருந்த விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.120 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,298 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,384 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
கடந்த சனியன்று உயர்ந்திருந்த வெள்ளி இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருக்கிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.95.60க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.95,600க்கு விற்கப்படுகிறது.