பிப்ரவரி 24 - இந்த நாளுக்குரிய சிறப்பு பற்றி தெரியுமா?

Aadmika
Feb 24, 2023,10:40 AM IST

இன்று பிப்ரவரி 24 - வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு - மாசி 12, வளர்பிறை, சமநோக்கு நாள்


இன்று காலை 06.58 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. காலை 08.47 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை 


மாலை - 06.30 முதல் 07.30 வரை 


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள் ?


யாகம் செய்வதற்கு, கரும்பு பயிடுவதற்கு, ஆபரணம் செய்வதற்கு, சங்கீத தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?


இன்று வராக மூர்த்தியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகையை வழிபட வளமான வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமையுடன் பஞ்சமி திதியும் இணைவதால் வாராகி அம்மனையும் வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும்.