பிப்ரவரி 22 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
இன்று பிப்ரவரி 22 - புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 10 ம் நாள். வளர்பிறை கீழ்நோக்கு நாள்.
காலை 09.47 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளன. காலை 10.14 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பின்பு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகமும், காலை 10.14 வரை அமிர்தயோகமும், பிறகு சிதத யோகமும் அமைந்துள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... வாழ்த்துறதுக்கு பதிலா இப்படி வறுத்தெடுக்குறாங்களே!
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
இன்று என்ன செய்யலாம் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, வேலைக்கு ஆட்களை சேர்க்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, வழக்கு தொடுப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் என்ன பலன்?
சக்கரத்தாழ்வாரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். புதன்கிழமை என்பதால் பெருமாளையும் வழிபட ஏற்ற நாள்.