பிப்ரவரி 13 - இன்று என்ன காரியம் செய்ய ஏற்ற நாள்?

Aadmika
Feb 13, 2023,09:11 AM IST

இன்று பிப்ரவரி 13 - மாசி 01 - திங்கட்கிழமை.


இன்று கீழ்நோக்கு நாள். தேய்பிறை அஷ்டமி. இன்று காலை 05.46 முதல்  நாளை அதிகாலை 04.35 வரை அஷ்டமி. இன்று இரவு 10.33 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் நட்சத்திரம்.


இன்று இரவு 10.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் வருகிறது.


நல்ல நேரம் : 


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!


ராகு காலம் : 


காலை 07.30 முதல் 9 மணி வரை.


எமகண்டம் : 


காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை


இன்று என்ன செய்யலாம்?


தானியம் வாங்குவதற்கு, அக்னி காரியங்கள் செய்ய, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கற்கள் தொடர்பான பணிகளை செய்ய ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை சேரும்?


தேய்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் உண்டாகும்.