பிப்ரவரி 10 - இன்று என்ன செய்யலாம்? யாரை வழிபட்டால் நல்லது நடக்கும் ?
இன்று பிப்ரவரி 10 - தை 27 வெள்ளிக்கிழமை. சுபமுகூர்த்த நாள். சமநோக்கு நாள்.
இன்று காலை 06.27 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி நாள் என்பதனால் வெற்றியை தரும் வாராஹியை வழிபட வேண்டிய நாள்.
இன்று இரவு 10.26 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம். காலை 06.35 மணி வரை சித்தயோகமும், பிறகு இரவு 10.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் :
காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை
எம கண்டம் :
பகல் 3 மணி முதல் 04.30 வரை
இன்று என்ன செய்யலாம்?
இன்று சமநோக்கு நாள் என்பதால் கிணறு வெட்ட, அபிஷேகம் செய்ய, வழக்குகளை ஆரம்பிக்க, தங்க நகைகள் வாங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானது. மகாலட்சுமியை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.