பிரபல வில்லன் நடிகர் மகளுக்கு விரைவில் திருமணம்

Meenakshi
Oct 17, 2023,10:07 AM IST

சென்னை: பிரபல வில்லன் நடிகர் விச்சு விஸ்வநாத்தின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் 1990களில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்தனக்காற்று. இப்படம் மூலம் வில்லனாகத் திரையுலகில்  அறிமுகமானவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 




இயக்குநர் சுந்தர் சி-யுடன்  38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தாய்மாமன்,மேட்டுப்பட்டி, அரண்மனை, கலகலப்பு போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


லட்சுமி ஸ்டோர், விடாது கருப்பு போன் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். விச்சு விஸ்வநாத் மகள் கோகிலா விஸ்வநாத்  ஆவார். கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும்  பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 


இவர்களது திருமணம் வரும் நவம்பர் 23ம் தேதி அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.  திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில்  இருவீட்டாரும் செய்து வருகின்றனர். 


இத்திருமணத்தில் பல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தம்பதியினர்களை வாழ்த்த உள்ளனர்.