அனைவரும் தவறாமல் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.. பிரதமர் மோடி கோரிக்கை
டெல்லி: இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 18வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து டிவீட் போட்டுள்ளார். அதில், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இன்று தேர்தல் நடைபெறும் 102 இந்த தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி மற்றும் அஸ்ஸாமி ஆகிய ஆறு மொழிகளில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.