ஈரோடு கிழக்கு.. குடிமகன்களுக்கு பேட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு!

Baluchamy
Feb 25, 2023,02:57 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள  அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு் விடுமுறை அறிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். 



ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த மாதம் ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து பிப்ரவரி 27 தேதி இடைத்தேர்தல் நடிவுபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்தக் கட்சிகளின் சார்பிலும், அவர்களது கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் தீவிரப் பிரச்சாரமும் நடந்து வருகிறது.


நாடு கடந்த "நாட்டு நாட்டு".. பாகிஸ்தான் கல்யாணத்தில் பட்டையைக் கிளப்பிய நடிகை!


வீடு வீடாக போயும், டீக் கடைகளில் டீ போட்டுக் கொடுத்தும், குழந்தைகளைக் குளிப்பாட்டியும், பரோட்டா தட்டியும், தோசை சுட்டுக் கொடுத்தும் என விதம் விதமாக டிசைன் டிசைனாக ஓட்டுவேட்டையாடுகின்றனர்.

நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடைபெற்ற பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து இன்று முதல் வரும் பிப் 27 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்  என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.