பாலஸ்தீன இந்தியர்களுக்கு அவசர ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு
டெல்லி: பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து காஸாமுனைப் பகுதியை குணடு வீச்சாலும் அதிரடித் தாக்குதலாலும் சூறையாடி வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல், அப்பாவி பாலஸ்தீனியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது மத்திய அரசு. அவசர கால ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துளளது.
அதன்படி பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்தியப் பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் ரமல்லா நகரில் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதிநிதி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவ்வால் - 0592-916418 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.