"நீயும் நானும் அன்பே".. ஜக்கர்பர்க்குடன் ஜோடி போட்ட போட்டோக்கள்.. கலகலன்னு சிரிச்ச மஸ்க்!

Su.tha Arivalagan
Jul 17, 2023,04:19 PM IST
- பூஜா

டெல்லி: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகிய இருவரையும் வைத்து ட்விட்டரில் வைரலாகி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் பெரும் பிரபலமாகியுள்ளது.

இந்தப் புகைப்படங்களுக்கு சிரிப்பு எமோஜி போட்டு ரிப்ளை கொடுத்துள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டருக்கு சவாலாக மார்க் ஜுக்கர்பெர்க் த்ரெட்ஸை (Threads) அறிமுகப்படுத்தியதில் இருந்து சமூக ஊடகங்களில்  இரண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் இடையிலும் வாக்குவாதங்களும் விமர்சனங்களும் அவ்வப்போது பரிமாறப்பட்டு வந்தது. 



இந்த நிலையில், 'சர் டோஜ் ஆஃப் தி காயின்' என்ற ஒரு ட்விட்டர் பக்கம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சில படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்த பகிரப்பட்ட படத்தொகுப்பில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியும் மெட்டா முதலாளியுமான மார்க் ஜக்கர்பர்க், எலான் மஸ்க்கின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாதாரண உடையில், கடற்கரையில் ஒரு காதல் ஜோடியாக போஸ் கொடுப்பது போல சித்தரித்துள்ளனர்.

கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கல்.. கடற்கரை மணல் வெளியில் காதலர்கள் போல ஓடி ஆடுகிறார்கள்.. இப்படிப் படங்கள் படு சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளன.  'நல்ல முடிவு' என்ற தலைப்புடன் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய இந்த விந்தையான 'ஃபோட்டோஷூட்  இணையத்தில் வைரலாகியதோடு ,எலான் மஸ்கிடம் இருந்து ஒரு சிரிப்பு எமோஜியையும் பெற்றுள்ளது.

இந்தப் படங்களைப் பார்த்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் இதுவே இரண்டு பேருக்கும் மிகவும் 'சரியான முடிவாக' இருக்கும் என்று கூறியுள்ளார். இன்னொருவர் "சிரி (Siri), நடாஷா பெடிங்ஃபீல்டின் 'லவ் லைக் திஸ்' என்ற பாடலை பேக்கிரவுண்டில் போடுங்க என்று கிண்டலடித்துள்ளார். 

நிஜமாகவே இந்த இரண்டு பேரும் சேர்ந்து இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தலாம் என்றும் சிலர் சீரியஸாக கூறியுள்ளனர். நம்மாளுங்கதான் இப்படி ஜாலியாக இவர்களை கலாய்த்துக் கொண்டுள்ளனர். மறுபக்கம் மஸ்க் கொஞ்சம் சீரியஸாக்ததான் இருக்கிறார்.

ஒரு டிவீட்டுக்கு அவர் பதிலளிக்கையில், ட்விட்டர் மற்றும் த்ரெட்டுகளுக்கு இடையேயான சண்டையில் ஜுக்கர்பெர்க்கை "கக் (cuck)" என்று அழைத்தார். பின்னர் த்ரெட்ஸை கேலி செய்து, "போட்டி இருக்கலாம், ஆனால் அடுத்தவரின் உழைப்பை காபி செய்து ஏமாற்றுதல் கூடாது" என்று ட்வீட் செய்தும் அதே நேரத்தில் 'காப்பிகேட்' செயலியை உருவாக்கியதற்கு மெட்டாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.