ஏன் டிரம்ப் மீது மட்டும்? கமலா மீது நடக்கலியே...பகீர் கிளப்பிய எலன் மஸ்க்
நியூயார்க் : ஏன் எப்போதும் டிரம்ப் மீது மட்டும் கொலை முயற்சி நடத்தப்படுகிறது? யாருமே கமலா ஹாரிசை கொல்ல முயற்சி நடத்தப்படாதது ஏன் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது ஜூலை மாதம் ஏற்கனவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிறலையில், நேற்று புளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் அருகில் இருக்கும் கோல்ட் மைதானத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து டிரம்ப் மீது நடத்தப்படும் இந்த கொலை முயற்சிகள் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பு உள்ளது.
டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக ராயன் வெஸ்லே ரவத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ஏகே 47 ரக துப்பாக்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் டிரம்ப்பை குறிவைத்து தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது உறுதி செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் இவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டிரம்ப் மீது 2வது முறையாக நடத்தப்பட்டுள்ள கொலை முயற்சி தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள எலன் மஸ்க், "ஏன் டொனால்ட் டிரம்ப்பை மட்டும் கொலை செய்ய நினைக்கிறார்கள். கமலா ஹாரிஸ் மீதோ, அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீதோ யாரும் கொலை முயற்சி நடத்தவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இவர் பேசியது ஒரு புறம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், மற்றொரு புறம், அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு எலன் மஸ்க் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்றே கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்