ப்ளூ டிக்.. காசு கொடுத்து வாங்கிய அமிதாப் பச்சன்.. ஷாருக் கானுக்கு ஃப்ரீ!

Su.tha Arivalagan
Apr 23, 2023,02:17 PM IST
மும்பை: டிவிட்டர் ப்ளூ டிக் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு முன்பு திடீரென உலகின் பல்வேறு பகுதி பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. பின்னர்  அது திரும்ப வந்து விட்டது. இதில் இப்போது ஒரு உள்குத்து நடந்திருப்பதாக புலம்பல் வெடித்துள்ளது.

சமீபத்தில் ப்ளூடிக் வேண்டும் என்றால் அதற்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனம் அறிவித்தது. இதனால் பிரபலங்களின் ப்ளூ டிக்குக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பலருடைய டிவிட்டர் ப்ளூடிக் பறிமுதலாகி விட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்,ஷாருக் கான்,யோகி ஆதித்யநாத் என பலருக்கும் ப்ளூ டிக் போய் விட்டது. இதனால் இது டிவிட்டரில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இதில் பலருக்கு அது திரும்பி வந்து விட்டது.




ஆனால் இப்போது ஒரு புது புலம்பல் வெடித்துள்ளது.  அதாவது 1 மில்லியன் பாலோயர்ஸ்களுக்கு மேல்
உள்ளவர்களுக்கு ப்ளூ டிக்கை இலவசமாக கொடுக்க உத்தரவிட்டுள்ளாராம் எலான் மஸ்க். இதனால்  1 மில்லியன் பாலோயர்களைக் கொண்ட பலருக்கும் தானாகவே ப்ளூ டிக் திரும்ப வந்து விட்டதாம்.  அதில் நடிகர் ஷாருக் கானும் ஒருவர்.  அவர் மட்டுமல்லாமல் விராட் கோலி, அலியா பட்,  தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் திரும்ப கிடைத்து விட்டது.

அதேசமயம், சில பிரபலங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்துதான் ப்ளூ டிக் திரும்பக் கிடைத்துள்ளதாம். அதில் முக்கியமானவர் அமிதாப் பச்சன்.  இதுதொடர்பாக சில காமெடியான ட்வீட்டுகளையும் செய்திருந்தார் அமிதாப். அய்யா சாமிகளா நான் காசு கட்டி சப்ஸ்கிரைப் செய்திருக்கேன். தயவு செய்து ப்ளூ டிக்கை கொடுத்திருங்கய்யா என்று அவர் கையெடுத்துக் கும்பிட்டும் கேட்டிருந்தார். இதையடுத்து தற்போது அமிதாப்பச்சனுக்கு ப்ளூடிக் கிடைத்து விட்டது.

டிவிட்டர் ப்ளூ டிக் வேண்டும் என்றால்  மொபைலுக்கு மாதம் ரூ. 900 கட்ட வேண்டும். அதுவே இணையதளத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் மாதம் ரூ. 650 கட்ட வேண்டும் அல்லது வருடத்திற்கு ரூ. 6800  கட்ட வேண்டும். இப்படிக் கட்டியும் கூட பல பிரபலங்களுக்கு அது பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் வந்துள்ளது. ஆனால் ஷாருக் கான் பணம் கட்டாமலேயே திரும்பக் கிடைத்துள்ளது. அவர் மட்டுமல்லாமல் மேலும் பலருக்கும் கூட இலவசமாக கிடைத்துள்ளது. இது என்ன அடிப்படை என்று பலரும் கேட்கிறார்கள்.

இன்னா மாமே மஸ்க்கு.. விளக்கம் சொல்லு நைனா!