தமிழ்நாட்டில்.. மின்சார கட்டணம் உயர்வு.. ஜூலை 1 முதல் அமல்..!
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2.18 சதவிகிதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இரண்டு மடங்கு அதாவது 4.83 சதவிகிதம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. இதில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்திற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி புதிய கட்டண விபரங்கள்:
வீட்டு உபயோகத்திற்காக 0 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401 முதல் 500 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.15 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9. 20 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 10.20 ஆக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11. 25 ஆக இருந்த கட்டணம், தற்போது 11.80 ஆக உயருகிறது.
ரயில்வே, ராணுவ வீரர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 8.55 ஆக உயர்கிறது. அதேபோல் கிராமப்புற குடிசை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9.35 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.80 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.