டில்லி, காஷ்மீரை குலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

Aadmika
Aug 06, 2023,10:16 AM IST
டில்லி : காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. 




ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 194 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் இந்தியாவின் வட மாநிலங்களை குலுங்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலஅதிர்வு பாகிஸ்தானின் ராவல்பெண்டி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காஷ்மீரில் உணரப்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன் நேற்று காலை காஷ்மீரின் குல்மார்க் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இது காலை 08.36 மணியளவில் 129 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.