"மண்டை பத்ரம்".. வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்.. நாளை.. தென் தமிழகத்தில்.. லேசான மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Feb 21, 2024,05:42 PM IST

சென்னை: தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதேசமயம், நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.


தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து பனிக்காலமும் முடிந்து விட்டது. வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. இப்பவே அடிக்கிற வெயில சமாளிக்க முடியல, இன்னும் ஏப்ரல், மே ல எப்படித்தான் சமாளிக்க போறோமோ என  புலம்புற மக்கள் குரல் இப்பவே எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. 




சரி வெயிலை சமாளிக்க இப்பவே தயாராக இருங்க. ஏன்னா தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வறண்ட வானியிலேயே நிலவுமாம். அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு முதல் மூன்று வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.


நாளை லேசான மழைக்கு வாய்ப்பு:


தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது.


23. 2.2024 லேசான மழைக்கு வாய்ப்பு:


தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.


24 .2 .24 மற்றும் 25.2 24:


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


26.2.24 மற்றும் 27. 2. 24 


தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.


சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 32- 33 டிகிரி செல்சியஸ்  ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 -23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.