தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு மேட்டர் இருக்கா? .. அடடே இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

Aadmika
Aug 25, 2024,10:08 AM IST

சென்னை : தண்ணீர் குடிப்பதற்கு உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அனைவரும் சரியாக பின்பற்றகிறோமா என்றால் சற்று யோசிக்க தான் வேண்டும். தண்ணீர் குடிப்பதில் பலரும் செய்யும் தவறுகள், செய்யாமல் தவிர்க்க வேண்டியவை, தண்ணீர் குடிக்கும் சரியான முறை என்ன என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.


தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது :


பலரும் தாகம் எடுக்கும் வரை காத்திருந்து, தாகம் வந்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள். இது உடலில் நீர்ச்சத்து குறைய காரணமாகி விடும். அதனால் தாகம் எடுக்கிறதோ இல்லையோ நாள் முழுவதும் சிறிது நேரத்திற்க ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.




தண்ணீர் குடிக்கும் முறை :


தண்ணீர் குடிக்கிறேன் என்ற பெயரில் பலரும் வேகமாக தண்ணீர் குடிப்பது, ஒரே நேரத்தில் அதிக அளவிலான தண்ணீரை குடிப்பார்கள். இவை இரண்டுமே தவறு. இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களை நீர்த்து போக செய்து விடும். தண்ணீர் குடிக்கும் போது பொறுமையாக, நிதானமாக குடிக்க வேண்டும். 


சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது:


சாப்பிடும் போது அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள ஆசிட்களை நீர்த்து போக செய்து விடும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவோ அல்லத சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்தோ தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவிற்கு இடையிலோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது.


அதிக தண்ணீர் குடிப்பது:


குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பதும் தவறு. இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். இதனால் உடலில் எலக்ட்ரோலைட்கள் சமநிலையில் இருப்பது பாதிக்கப்படும்.




பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு :


பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது, அதுவும் சூடான தண்ணீரை ஊற்றி குடிப்பத உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை உடலுக்குள் செல்ல காரணமாக அமையும்.


உடற்பயிற்சியின் போது தண்ணீர் :


உடற்பயிற்சி செய்யும் போது போதிய அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது பலரும் செய்யும் பொதுவான தவறாகும். உடற்பயிற்சியின் போது போதிய தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, எளிதில் உடலில் சோர்வு ஏற்படும். இத உடலில் உஷ்ணம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.




குளிர்ந்த தண்ணீர் :


குளிர்ச்சியான ஐஸ் தண்ணீரை குடிப்பதால் ரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்படும், செரிமான பிரச்சனைகளும் ஏற்படும். அதோடு தொண்டையில் பாதிப்புகள் ஏற்படும். அதனால் அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை குடிப்பதே சிறப்பானதாகும்.


குளிர்பானங்கள் :


தாகம் எடுக்கிறது என்பதற்காக தண்ணீருக்கு பதில் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், சோடா, ஜூஸ் ஆகியவற்றை குடிப்பதால் உடலில் கலோரிகள் அதிகரிக்கும். இதனால் குடிக்கும் குளிர்பானத்தின் அளவு அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்க வைக்கும். இது பலவிதமான உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


காலையில் தண்ணீரை தவிர்ப்பது :


காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது பலரும் செய்யும் தவறாகும். தூங்கும் போது நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். காலையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூங்கும் போது தானாகவே உடலில் நீர் தன்மை குறையும். இதை புதுப்பிக்க காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்