ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!
சென்னை: வெயில் காலம் தொடங்கி விட்டது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு வாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டியது, போதி அளவுக்கு தண்ணீர் குடிப்பதுதான்.
நமது உடலுக்கு தண்ணீர் மிக மிக முக்கியம். நீர்ச்சத்து சரியான அளவில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்பட தண்ணீர் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், தேவையான அளவு நீர் குடிப்பதால் சருமம் நன்றாக இருக்கும். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் (டிடாக்சிபிகேஷன்) மாற்று மருந்தாகவும் தண்ணீர் செயல்படுகிறது.
தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் சரியாக செயல்பட உதவுகிறது, இதனால் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. போதுமான அளவு நீர் அருந்துவதால், உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது, உடல் எடையை குறைக்கும். குடிநீரால், செரிமானம் சீராக நடக்கும், இதனால் உணவுப் பொருட்கள் சீராகச் செரிக்க உதவுகிறது.
தண்ணீர் என்பது நாம் அவசியம் குடிக்க வேண்டிய ஒன்று. தினசரி போதுமான அளவு நீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் அவசியம்.
போதிய அளவில் தண்ணீர் குடிப்பதால் தலைவலியும் கூட சரியாகும். சரியாக தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலியும் ஏற்படும்.
மூட்டுகளில் உள்ள சிறுநீரக திரவத்தை மேம்படுத்தி, மூட்டுக்களைச் சரியாக பாதுகாக்கவும் தண்ணீர் உதவுகிறது. போதுமான அளவு நீர் குடிப்பதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கும். நீர் உடலிலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், மன அழுத்தம் ஏற்படலாம். போதுமான நீர் குடிப்பதால் மன அமைதி நிலை பெறுகின்றது.
நாக்கின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், வாய் நறுமணத்திற்கும் போதிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். போதுமான அளவு நீர் குடிப்பதால் உடலில் அமிலத்தன்மையை சீராக்கி சாப்பிடுவதற்கு ஆரோக்கியமானது. மாரடைப்பைக் குறைக்கவும், மலச்சிக்கலைக் குறைக்கவும் கூட தண்ணீர் தேவையான அளவு குடிப்பது அவசியமாகும்.
சாப்பிடுவதற்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்கிறோம் தெரியுமா.. முன்பே நீர் குடிப்பதால், சில மணி நேரத்திற்கு பசிக்காமல் தடுக்க முடியும். இது உணவு அளவை குறைத்து, அதிகப்படியான கொழுப்புகளைச் செரிப்பதைத் தடுக்க உதவும். தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் சீராக செயல்பட உதவுகிறது.
உடற்பயிற்சி செய்யும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் உடல் இயக்கம் சீராக இருக்கும். உடம்பு வறண்டு போகாமல் தடுக்க முடியும்.
வெயில் காலமோ, மழைக்காலமோ, எப்போதுமே நாம் சரியான அளவில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நமது உடல் உறுப்புகளின் இயக்கம் சரிவர நடக்கும், நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.