Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
Oct 29, 2024,06:45 PM IST
சென்னை: தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம்
6.27 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கம் போல பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.07 கோடியாக உள்ளது. பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேர் ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் - 6,27,30,588
பெண் வாக்காளர்கள் - 3,19,30,833
ஆண் வாக்காளர்கள் - 3,07,90,791
மாற்றுப்பாலினத்தவர்கள் - 8,964
அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி
சோழிங்கநல்லூர் - 6,76,133 பேர்
குறைந்த பட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி
கீழ்வேளூர் ( நாகப்பட்டனம்) - 1,73,230 வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி 1ம் தேதி புதிய வாக்காளராக 18 வயது பூர்த்திக்கான நாளாக வைத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்த பணிகளை பின்பற்றுவதற்கு வசதியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்