"வெட்கமே இல்லையா மேன்".. டாக்டர் ஷர்மிளாவின் பளிச் ட்விட்.. யாரை சொன்னார் தெரியுமா?

Baluchamy
Mar 08, 2023,11:01 AM IST

சென்னை: "வெட்கமே இல்லையா மேன் உனக்கு" என திமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் ஷர்மிளா, சிடிஆர் நிர்மல் குமாரின் ட்விட்டர் பதிவுக்கு கட்டமாக ட்விட் செய்துள்ளார்.


தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக பொறுப்பு வகித்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இவர் கடந்த 5 ஆம் தேதி திடீரென தமிழ்நாடு கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமாரின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியது.


தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக நிர்மல் குமார் செயல்பட்ட பொது பாஜக குறித்து எழும் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலளித்து எதிர் விமர்சனம் செய்து வந்தார். மேலும் திமுக கட்சியின் செயல்பாடுகள், மாநிலங்களுக்குள் நிலவும் பிரச்சனைகள் என அனைத்தையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தார்.  




இப்படியாக ஐடி விங் தலைவர் பொறுப்பை சிறப்பாக பயன்படுத்தி வந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். விலகிய சில மணி நேரங்களில் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு போட்டோ மற்றும் பயோவை அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றி அதிரடி காட்டினார். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி எனவும் எடப்பாடியார் என்னும் ஆளுமை எனவும் அதிமுகவுக்கு ஆதரவாக ட்விட் செய்தார். தொடர்ந்து எடப்பாடியார் எனும் ஆளுமை என்ற ஹேஷ்டேக்கை டிரண்டு செய்து கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் சிடிஆர் நிர்மல் குமாரின் இந்த திடீர் தாவலுக்கு திமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் ஷர்மிளா பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக நிர்மல் குமார் பதிவிட்ட ட்விட்டை விமர்சித்து ஷர்மிளா கட்டமாக ட்விட் செய்துள்ளார். அதில், நேற்று வரை அண்ணாமலை எனும் ஆளுமை, இன்று எடப்பாடி எனும் ஆளுமை, நாளை சீமான் எனும் ஆளுமையா எனவும், இறுதியாக வெட்கமே இல்லையா மேன் உனக்கு என சிடிஆர் நிர்மல் குமாரை விமர்சித்து கட்டமாக ட்விட் செய்துள்ளார். தற்போது டாக்டர் ஷர்மிளாவின் ட்விட் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.