ஏப்ரல் 05 - இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

Aadmika
Apr 05, 2023,09:12 AM IST

இன்று ஏப்ரல் 05, புதன்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 22

பங்குனி உத்திரம், பெளர்ணமி, மேல்நோக்கு நாள்


காலை 10.16 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.09 வரை அமிர்யோகம், பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30  வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


உழவு செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, நீர் நிலைகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவ பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.