தொட்டபெட்டா ரோட்டு மேல.. நாளை முதல் சுத்திப் பார்க்கலாம்.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Meenakshi
Aug 23, 2024,03:57 PM IST

நீலகிரி: பாஸ்ட் டேக் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நிறைவடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று உதகை. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ஏன் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உதகை வரும் சுற்றுலா பயணிகள் பொதுவாக அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க வேண்டும் என்று எதிர் பார்த்து தான் இங்கு வருவார்கள். அப்படி இருக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி வெகு நேரம் காத்திருப்பர். அத்துடன் வாகன கட்டணம் வசூலிக்க காத்திருக்கும் நேரமும் அதிகமாக இருப்பதினால் அவர் சுற்றுலாவின் போது எத்தகைய இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவற்றை எல்லாம் பார்க்க முடியாத சூழல் உருவாகி விடும்.




இந்த காரணங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருதித்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்ட பெட்டா பகுதியில் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் மின்னனு பரிவர்த்தனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் இறுதி கட்ட பணிக்காக ஆகஸ்ட் 22ம் தேதி வரை தொட்ட பெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதக்கப்பட்டிருந்தது.


இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணிக்காக ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொட்ட பெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை முடிந்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் தொட்ட பெட்டா செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தகவல் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிறகென்ன தொட்டபெட்டா ரோட்டு மேல ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர்லாமா!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்