திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. சிட்டிங் எம்.பிக்கள் 11 பேருக்கு சீட் மறுப்பு!
சென்னை: திமுக சார்பில் போட்டியிடும் 21 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் 11 பேர் புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் மிக மிக சுமூகமாக தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து விட்டது. நேரடியாக 22 தொகுதிகளில் உதய சூரியன் சின்னம் போட்டியிடவுள்ளது. அதில் 21 தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர். நாமக்கல் தொகுதியில் கொங்குாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பெயர்களையும் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதன் வேட்பாளர்கள் விவரம்:
பட்டியலில் 11 பேர் புதுமுகங்கள் ஆவர். பெண்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டதாரிகள் 19 பேர் உள்ளனர். முனைவர் பட்டம் பெற்றோர் 2 பேர் உள்ளனர்.
வடசென்னை - டாக்டர் கலாநிதி
தென் சென்னை - முனைவர் சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை - சி.என் அண்ணாதுரை
வேலூர் - கதிர் ஆனந்த்
தருமபுரி - ஆ.மணி
பெரம்பலூர் - அருண் நேரு
கள்ளக்குறிச்சி - மலையரசன்
தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
சேலம் -செல்வகணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி
தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமார்
ஆரணி - தரணிவேந்தன்
தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
கோயம்புத்தூர் - முனைவர் கணபதி ராஜ்குமார்