DMK75.. பவளக்காரத் தெருவில் போட்ட விதை.. .. உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Su.tha Arivalagan
Sep 17, 2023,12:50 PM IST
சென்னை: திமுக தோன்றி இன்று 75வது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நாளை பவள விழாவாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக. தாய்க்கழகமான திராவிடர் கழகத்திலிருந்து அணணா உள்ளிட்டோர் பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. கட்சி உருாகி இன்றோடு 75 வருடமாகிறது.





இதையொட்டி மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள டிவீட்டில், எண் 7, பவளக்காரத் தெருவில் போடப்பட்ட விதை, தி.மு.கழகம் எனும் ஆலமரமாக இன்று பவள விழா காண்கிறது.

பேரறிஞர் அண்ணாவால் ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்ட பயணம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 75 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் - எண்ணிலடங்கா போராட்டங்கள் கடந்து கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு தமிழ்நாடு காத்து நிற்கிறது நம் கழகம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ் மக்களின் மேன்மைக்கும் கழகம் ஆற்றிய பணிகள் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். 

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை - கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை, முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வீட்டுக்கு அனுப்ப கழகம் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.