தீபாவளிக்கு லட்டு செய்யணுமா..அப்ப இத மெதல பாலோ பண்ணுங்க..!

Manjula Devi
Sep 28, 2024,12:15 PM IST

சென்னை :   தீபாவளி வந்தாலே படு குஷி தான். அதிலும் தீபாவளி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புது ஆடைகள், வித விதமான பலகாரங்கள் தான். தீபாவளிக்கு இந்த வருடம் மார்க்கெட்டில் என்ன புது மாதிரியான டிரஸ், பட்டாசு,  ஸ்வீட்டுகள் வந்திருக்கு என பலரும் ஆவலாக தேடி செல்வதுண்டு. அதிலும் ஒரு சிலரோ தீபாவளி என்றாலே பாரம்பரியமாக ஒரு சில இனிப்புகளை வீட்டில் செய்து பரிமாற வேண்டும் என எண்ணுவர். அப்படி வீட்டில் ஸ்வீட்ஸ் ட்ரை பண்றவர்களுக்கு ஒரு சில நேரம் ஸ்வீட் நல்லா வரும். ஒரு சில நேரமோ சொதப்பிடும். அப்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் புலம்பிய தருணங்கள் உண்டு. சரி இந்த வருடம் ஆவது சரியாக செய்ய வேண்டும் என நினைத்து ட்ரை பண்றவங்களுக்கு ஒரு சில சூப்பரான ஐடியாவை தரேன்.


 லட்டு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் லட்டுவை கடவுள்களுக்கும் படைக்கும் பிரசாதங்களில் முக்கியமான ஒன்றாக மக்கள் கருதுகின்றனர். அப்படிப்பட்ட லட்டுவை எப்படி ஈஸியா செய்வது..அதன் பக்குவம் என்ன என்பது தெரியவில்லையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்.




முதலில் கால் கிலோ கடலை மாவை எடுத்துக்கொண்டு அதை சலித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, தேவைப்பட்டால்  ஃபுட் கலர் சேர்த்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எண்ணெய் காய்ந்ததும் பூந்தி கரண்டியில் இந்த மாவை ஊற்றினால் எண்ணெயில் பூந்தியாக வரும். (அப்படியே பூந்தி கரண்டியில் செய்யத் தெரியவில்லை என்றாலும், பூந்தி கரண்டி இல்லை என்றாலும், இடியாப்ப உலக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை ஊற்றினால் அதிலிருந்து சிறு சிறு துளிகளாக பூந்திகள் விழும். இதில் சிரமம் இருக்காது).இதை அதிக நேரம் எண்ணெயில் வேகமைக்காமல் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே எடுத்துவிடவேண்டும்.


பிறகு பூந்தி ஆறியதுடன் அதை ஒரு மிக்ஸியில் போட்டு ஒரு அடி, கொரகொரப்பாக அடித்து வைத்து கொள்ள வேண்டும். மறுபுறம் அடுப்பில் கடாயை வைத்து கால் கிலோ சக்கரையை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை பாகு ஒரு கம்பிப்பதம் வரும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டு, ஏற்கனவே மிக்ஸியில் பொடித்து வைத்த பூந்தியுடன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, குங்குமப்பூ சேர்த்து  பாகில் போட்டு கிளர வேண்டும். பின்னர் மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும்.


பூந்திகளை மிக்ஸியில் பொடிப்பதால் பாகில் பூந்திகள் ஊற வேண்டும் என்ற அவசியம் இல்லை சீக்கிரம் ஊறிவிடும் அதே சமயம் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்களை பாலோவ் பண்ணினால் விரைவாகவும் லட்டு செய்யலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்