Deepavali Special buses: இன்று முதல் 3 நாட்களுக்கு.. எங்கு போய் ஏறணும்னு தெரியுமா.. Full details!

Su.tha Arivalagan
Nov 09, 2023,10:56 AM IST

சென்னை: இதோ... தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டது.  இன்றிலிருந்து ஜஸ்ட் 3 நாட்களில் தீபாவளி. இதையொட்டி சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.


வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சிறப்புப் பேருந்துகளையும் இணைத்து 10,975 பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் இயக்கப்படவுள்ளது. அதேபோல சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16,895 பேருந்துகள் இயக்கப்படும். இன்று தொடங்கி 11ம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது 13ம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்.


எங்கிருந்து பஸ்கள் புறப்படும்




பயணிகளின் வசதிக்காக 5 இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து இந்து பேருந்துகள் இயக்கப்படும்.


கோயம்பேடு பேருந்து நிலையம்:  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோயயம்புத்தூர், திருப்பூர், ஊட்டி,பெங்களூரு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில்




தாம்பரம் சானட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்:  கும்பகோணம், தஞ்சாவூர்.


தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்: திண்டிவனம் மார்க்கமாக - திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி,வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.




மாதவரம் புதிய பேருந்து நிலையம்:  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி


கே.கே.நகர் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.


பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்