சிவகார்த்திகேயனின் 23வது படம்.. ஏ.ஆர். முருகதாஸுடன் கைகோர்க்கும்.. மதராஸி.. 90% ஷூட்டிங் ஓவர்!
சென்னை: சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கு மதராஸி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை அந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் இன்றி, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வரும் படத்திற்கு மதராஸி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 23வது படமாகும். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கிய இப்படத்துக்கு பெயரிடப்படாமல் சுமார் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். தற்போது சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இதன் பெயர் மற்றும் பெயருடன் கூடிய அறிமுகம் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் துப்பாக்கி பட வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜி மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் வேறு எந்த படத்திலும் பார்த்திராத சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்றும் படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் உடல் மொழி மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.