வத்தலகுண்டு 1000 அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில்.. நேர்த்திக்கடனாக குவிந்த 3000 அரிவாள்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு 3000 அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது 1000 அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில். மிகவும் துடிப்பான சாமியாக கருதப்படும், இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா தற்போது நடந்து வருகிறது. இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக அரிவாள்களை செய்து கொண்டு செலுத்துவது பக்தர்கள் வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வேண்டுதல் வைத்த பக்தர்கள் 3000 அரிவாள்களை காணிக்கையாக தெலுத்தியுள்ளனர். இந்த கருப்பணசாமிக்கு அரிவாள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் நேர்த்திக்கடனாக அரிவாள்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்களாம். மிகவும் பழைமை வாய்ந்த சக்தியான கோவிலாக இருந்த கோவில் கருதப்படுகிறது. அதனால் எண்ண வேண்டினாலும் வேண்டுதல் நிறைவேறும் என்று செல்லப்படுகிறது.
இந்த கோவிலில் வேண்டிக் கொண்ட பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அரிவாளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த அரிவாள்களை செய்வதற்காகவே இங்கு தலைமுறை தலைமுறையாக 5 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விரதம் இருந்து தான் அரிவாள் தயாரிப்பில் ஈடுபடுவார்களாம்.
தற்போது நடைபெற்று வரும் திருவிழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். காணிக்கை செலுத்த உள்ள அரிவாள்களை மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி ஊரின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து. கருப்பணசாமிக்கு வழிபாடு செய்யப்பட்ட பின்னர் தான் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
2 அடி முதல் 15 அடி வரை உள்ள அரிவாள்களை நேர்க்கடனாக செலுத்துவார்களாம். ஒரு சில பக்தர்கள் தங்கத்தினால் செய்த அரிவாள்களையும் நேர்க்கடனாக செலுத்துவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.