விஜய் ஜெயிலர் படம் பார்த்துட்டாரா?.. நெல்சன் வெளியிட்ட செம தகவல்
Aug 12, 2023,02:39 PM IST
சென்னை : ரஜினி நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசாகி உலகம் முழுவதும் செம வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே கிட்டதட்ட ரூ.70 முதல் 90 கோடிகளை வசூல் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்து தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் நிச்சயமாக படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
தெலுங்கில் சிரஞ்ஜீவி நடித்த போலோ சங்கர் படத்தை ரிலீஸ் செய்வதற்கு கோர்ட் அனுமதி வழங்கி விட்டது. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் சிரஞ்ஜீவி படத்துடன் போட்டி போடும் வகையில் ஜெயிலர் படத்தின் டிக்கெட் விற்பனை விறுவிறுப்படைந்து வருகிறது. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டைரக்டர் நெல்சன் திலீப் குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் பட ரிலீசை தொடர்ந்து டைரக்டர் நெல்சன் திலீப்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். முதல்வரும் ஜெயிலர் படத்தைப் பார்த்து விட்டார்.
பிறகு அவர் அளித்த பேட்டியில், விஜய் எனக்கு போன் செய்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார் என்றார். விஜய் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகிறார். யார் சூப்பர் ஸ்டார் என்ற விவகாரத்தில் ரஜினிக்கும் விஜய்க்கு மோதல் இருந்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நெல்சன், ஜெயிலர் படத்தின் கதையை ரஜினியிடம் சொல்ல சொல்லி எனக்கு நம்பிக்கை கொடுத்ததே விஜய் தான். நீ போய் கதையை சொல், ரஜினி சாருக்கு கண்டிப்பாக இந்த கதை பிடிக்கும் என அவர் தான் சொன்னார் என்றார்.
இப்போது ஜெயிலர் ரிலீசான உடனேயே விஜய், நெல்சனை அழைத்து வாழ்த்து தெரிவித்து விட்டதால் வெளிநாட்டில் இருக்கும் விஜய், ஜெயிலர் படத்தை பார்த்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் விஜய் வாழ்த்து சொன்னதை அவரது ரசிகர்கள் பெருமையாக சொல்லி, கொண்டாடி வருகின்றனர்.