நயன்தாரா கல்யாண டாக்குமென்டரி கலாட்டா.. தனுஷ் தொடர்ந்த வழக்கு.. 22ம் தேதி இறுதி விசாரணை

Meenakshi
Jan 08, 2025,04:07 PM IST

சென்னை: திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளைப் பயன்படுத்தியதாக நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 22ம் நடக்கும் என்று சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.


டைரக்டர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாராவின் திருமணத்தின் போதே அவர்களின் காதல் வாழ்க்கையை  ஆவண படமாக எடுத்து வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருந்தார். 




நயன்தாராவின் ஆவண படத்திற்காக நானும் ரெளடி தான் படத்தின் 3 விநாடி வீடியோ காட்சிகள், 2 பாடல்கள், இசை ஆகியவற்றை தங்களின் ஆவண படத்தில் பயன்படுத்துவதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் நயன்தாரா தரப்பில் இருந்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பலமுறை இவர்கள் கேட்டும் தனுஷ் பதில் ஏதும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.


தனுஷ் அனுமதி வழங்காததால் வேறு மாதிரியாக எடிட் செய்து ஆவணப் படத்தை தயாரித்து முடித்து வெளியிட்டனர்.  நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த நவம்பர் 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.இந்நிலையில் தன்னுடைய படத்தின் காட்சிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் நயன்தாரா தரப்பு பயன்படுத்தியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்தும், தனுஷை கடுமையாக தாக்கியும் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.  


நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ம் தேதி (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்