தந்தேராஸ் 2024.. நாடு முழுவதும் கொண்டாட்டம்.. இதெல்லாம் வாங்கினால் செல்வம் சேரும்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : தந்தேராஸ் என்பது வட மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் மிக முக்கிமான வழிபாட்டு நாளாகும். தீபாவளியின் முதல் நாளாக கருதப்படும் தந்தேராஸ், அட்சய திரிதியைக்கு இணையான நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் மகாலட்சுமியையும், குபேரரையும் வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு தந்தேராஸ் தினம் அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தந்தேராஸ் அன்று தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது, புதிய முதலீடுகள் செய்வது, நிலம், கார் போன்ற வாகனங்கள் வாங்குவது ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதிய மற்றும் மங்கலகரமான பொருட்களை வாங்கினால் அது பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த நாளில் தங்கம், புதிய நகைகள் வாங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கம் வாங்குவது என்பது முடியாத காரியம். அதனால் தங்கத்திற்கு இணையாக வேறு என்னென்ன பொருட்களை வாங்கினால் மகாலட்சுமியின் அருளை பெற்று, வீட்டில் ஐஸ்வர்யம் பெருக செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தந்தேராசில் வாங்க வேண்டிய பொருட்கள் :
1. தங்கம் அல்லது வெள்ளி காசு
2. பித்தளை பாத்திரம் அல்லது சொம்பு
3. வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய பாத்திரங்கள்
4. உப்பு
5. பூஜை பொருட்கள்
6. பச்சரிசி
7. அகவல் விளக்கு
8. லக்ஷ்மி குபேரர் விளக்கு
9. பசு நெய்
10. துடைப்பம்
11. வாசனை மலர்கள்
12. பழங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்