ரூ போட்டு அலறச் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

Meenakshi
Mar 28, 2025,05:16 PM IST

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ரூ போட்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பலரை அலறச் செய்துள்ளார் என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே பாராட்டும்படி நடத்திக் காட்டியிருக்கிறோம். எந்த சவாலான போட்டியையும் எளிதில் நடத்தும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதற்குச் சான்று இது. ராதாபுரத்தில் சர்வதேச மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.  அவைத் தலைவர் அப்பாவு கோரிக்கையை ஏற்று முதல்வர் ஏற்கனவே அறிவித்த திட்டம் இது.




கடந்த ஆண்டு எனது காரில் ஏற முயன்றார் இபிஎஸ், அப்போது எனது பாதை மாறாது என்று கூறினார். ஆனால் தற்போது 3 கார்கள் மாறி டெல்லிக்கு பயணம் சென்றதாக சொன்னார்கள். அதற்கு வாழ்த்துக்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் ஒரு முறை கூட பேரவையில் என் பதிலின் போது இருந்தது இல்லை. தொடர்ந்து கவனித்து கொண்டே இருக்கின்றேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ரூ போட்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பலரை அலறச் செய்துள்ளார்.


மகளிர் உரிமைத்தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 19 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கோடி உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.  நான் முதல்வன் திட்டத்தில் 2.56 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் 104 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடி உயர் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.


 நிலம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ஆறு மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் மூன்று மாதங்களில் நிறைவுபெறும். 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இதுவரை 6 புதிய விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டு உள்ளது. விடுதி மாணவர்களின் எண்ணிக்கை 2300 இல் இருந்து 2600 ஆக அதிகரித்துள்ளது.


சென்னை மற்றும் மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடப்பாண்டில் ரூபாய் 56 கோடி செலவில் நடைபெறும். ரூபாய் 19 கோடியில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். 25 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.